அதிகாலை 2மணிக்கு வானில் அதிசயம்: என்ன தெரியுமா?

டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வானத்தைக் கவனிக்கத் தவறாதீர்கள். அற்புதமான காட்சி வானில் தெரியும் என்று வானவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோவிட்-19 பாதிப்புக்காக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது; பல தொழிற்சாலைகள் நீண்டகாலம் இயங்கவில்லை. இதன் காரணமாகக் காற்றில் மாசு குறைந்து, தொலைவில் உள்ள இயற்கைக் காட்சிகள் கண்ணுக்குப் புலப்படுகின்றன. வானில் நிகழும் பல அற்புதங்கள் மாசு காரணமாகக் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை.

இப்போது காற்று மாசு குறைபாக இருப்பதால் இந்த வண்ணக்கோலம் உங்கள் கண்களுக்குத் தெரியும்.வால் நட்சத்திரங்களின் வால் பகுதி பல்வேறு துகள்கள், மாசுகள், பனிக்கட்டிகளால் ஆனவை. 3200 பாத்ட்ஹோன் என்ற வால் நட்சத்திரத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு விடப்பட்ட தூசுகள் பெரும்பாலும் ஜெமினி என்ற நட்சத்திரத்தை சுற்றிக் காணப்படுகின்றன. ஆகவே இவை ஜெனிமிடுகள் (Geminids) என்று அழைக்கப்படுகின்றன. அந்த வால் நட்சத்திரம் ஒவ்வொருமுறை சூரியனைக் கடக்கும்போதும், அதாவது 1.4 ஆண்டுகளுக்கு ஒருமுறை துகள்களை உதிர்க்கிறது.

அது எரிகல் மழையாகப் பொழிகிறது. இந்த எரிகல் மழை முதன்முதலாக 1862ம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு பாத்ட்ஹோன் வால்நட்சத்திரமே காரணம் என்பது 1983ம் ஆண்டுதான் தெரிய வந்தது.இந்த ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் இந்த எரிகல் மழை நிகழ்வு தெரியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலும் இதைக் காணலாம். மற்ற நேரங்களில் இது கண்ணுக்குத் தென்பட்டாலும் அதிகாலை 2 மணிக்கு எரிகல் மழையைத் தெளிவாகக் காணமுடியும். நகரங்களில் வசிப்பவர்கள் மாசு காரணமாகப் பார்க்க இயலவில்லையென்றால், நகரை விட்டு சற்றுத் தள்ளி கொன்று பார்த்தால் இந்த கண்கொள்ளா காட்சியைக் காணமுடியும்.

You'r reading அதிகாலை 2மணிக்கு வானில் அதிசயம்: என்ன தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - L scheme டிப்ளமோ மாணவர்களுக்கான Equivalent subject பற்றிய செய்தி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்