குடியரசு தினத்துக்கு சிறப்பு எமோஜி: ட்விட்டர் வெளியிட்டது

இந்தியாவின் 72வது குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு ட்விட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய போர் விமானங்கள் தேசிய கொடியின் நிறத்தில் பறப்பதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று இந்திய விமான படை விமானங்கள், தேசிய கொடியின் மூவர்ணத்தில் வானில் பறந்து சாகசம் செய்யும். அதைக் குறிக்கும் வண்ணம் இந்த எமோஜி வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் அணிவகுப்பை மெய்நிகர் (virtual) வடிவில் கொண்டு வர முயற்சித்திருப்பதாக ட்விட்டர் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் கொண்டாட்ட உணர்வை கொண்டுவரும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். “#TouchTheSkies” என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்துமாறு இந்திய விமான படை ட்விட்டர் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த எமோஜி வரும் ஜனவரி 30ம் தேதி வரைக்கும் இயங்கும். தமிழ், ஹிந்தி, உருது, கன்னடம், பஞ்சாபி, மராத்தி, மலையாளம், வங்கம், தெலுங்கு, குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது.

You'r reading குடியரசு தினத்துக்கு சிறப்பு எமோஜி: ட்விட்டர் வெளியிட்டது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடியரசு தினத்தன்று வெளியிடப்படுகிறது ஃபாஜி கேம்: ஆண்ட்ராய்டு சாதனங்களில் இயங்கும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்