ஸ்விக்கியில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி தகவல்

இருக்குமிடத்திலிருந்தே ஆர்டர் செய்து உணவைப் பெற்றுக்கொள்வது வாடிக்கையாளர் சேவையில் நடைபெற்றுள்ள பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுபோன்ற ஆர்டர்களில் சில நேரங்களில் தாமதம், வேறு உணவு டெலிவரி, ரத்து செய்யப்படுதல் போன்ற சில தவறுகள் நடக்கின்றன.உத்திர பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சாணக்கியா தாஸ் என்ற பெண்ணுக்கு ஸ்விக்கியில் வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளது. உணவை ஆர்டர் செய்து விட்டு வருவதற்காக காத்திருந்த சாணக்கியா தாஸுக்கு ஸ்விக்கியிலிருந்து "உங்கள் ஆர்டரை வேறு யாரோ பறித்துக்கொண்டுள்ளார்கள்.

ஆகவே, உங்களுக்குக் கொண்டு வந்து தர இயலாததற்காக வருந்துகிறேன். நீங்கள் ஏமாற்றமடைவீர்கள் என்று அறிவேன். நான் உங்கள் ஆர்டரை ரத்து செய்கிறேன். வேறு ஏதாவது உணவகத்திலிருந்து இன்னொரு முறை ஆர்டர் செய்யும்படி வேண்டுகிறேன்" என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.தனக்கு வந்த குறுஞ்செய்தியைச் சாணக்கியா தாஸ், டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதைக் குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

You'r reading ஸ்விக்கியில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்