பாராளுமன்ற கூட்டத்தில் நிர்வாணம் – கனடா எம்.பி.செயலால் அதிர்ச்சி!

பாராளுமன்ற கூட்டத்தில் கனடா எம்.பி ஒருவர் நிர்வாணமாக தோன்றியதால் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கொரோனா பெருந்தோற்று உலக்கத்தையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் பல பெருநிறுவனங்களில் வோர்க் ப்ரம் ஹோம் முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலையின் பாதிப்புகளை உணர்ந்து நீதிமன்றங்கள் உள்ளிட்டவை கூட காணொலி வாயிலாக நடத்தப்படுகின்றன. பெரும்பாலான ஆலோசனைக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள், உச்சிமாநாடுகள் காணொளி வாயிலாகவே நடத்தப்படுகின்றன. இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்போர், உஷாராக இருக்க வேண்டும் என்பதை கனடா எம்.பி சொல்லாமல் சொல்லியுள்ளார்.

மீட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவோ, மீட்டிங் முடிந்த பிறகோ. கேமரா ஆனில் இருந்தால், நமது செயல்பாடுகளை மற்றவர்கள் பார்வைக்கு சென்றுவிடும் என்பதை மறக்கக்கூடாது. இது பல நேரங்களில் நமக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதை கனடா எம்.பி வில்லியம் ஆமோஸ் செயலின் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

கனடா நாட்டில் காணொளி வாயிலாக நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் எம்பி வில்லியம் ஆமோஸ் கலந்துகொண்டார். அப்போது, அவர் கையில் செல்போனுடன், கியூபெக்-கனடா தேசியக்கொடிகளுக்கு மத்தியில் நிர்வாண நிலையில் தோன்றினார். காணொளியில் இணைந்திருந்த மற்ற உறுப்பினர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த செயலால் வெட்கித் தலைகுனிந்த எம்.பி. வில்லியம் ஆமோஸ், நடந்த தவறுக்காக சக உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

நான் இன்று மிகவும் மோசமான தவறைச் செய்துவிட்டேன். இதற்காக நான் வெட்கப்படுகிறேன். ஜாகிங் சென்று திரும்பியதும் உடை மாற்றியபோது, கேமரா தற்செயலாக ஆன் ஆனதை கவனிக்கவில்லை. இதற்காக சபையில் உள்ள சக உறுப்பினர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது என்று வில்லியம் கூறி உள்ளார்.

உறுப்பினர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வீட்டில் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் ஆடை அணிந்திருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி கொறடா அறிவுறுத்தி உள்ளார்.

You'r reading பாராளுமன்ற கூட்டத்தில் நிர்வாணம் – கனடா எம்.பி.செயலால் அதிர்ச்சி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 21G அரசு பேருந்து டு காஸ்ட்லி BMW கார்.. தமிழ் புத்தாண்டில் ரம்யா பாண்டியன் `கெத்து போஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்