கோட்டையை நோக்கி பேரணி... ஆசிரியர்கள் எச்சரிக்கை!

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் 5 அம்ச கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், கோட்டை நோக்கி பேரணி செல்வோம் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இடைநிலை ஆசிரியர்களின் 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்குவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் அப்போது வலியுறுத்தப்பட்டன.

ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் சங்க பிரநிதிகளை அழைத்து அரசு பேச வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில், வரும் 23-ஆம் தேதி கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி நடத்தப்படும்” எனவும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

You'r reading கோட்டையை நோக்கி பேரணி... ஆசிரியர்கள் எச்சரிக்கை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சட்டவிரோத பேனர்கள்... அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்