கார் விபத்தில் உயிரிழந்த பெண் நிருபர்- தமிழக அரசு நிதியுதவி

தனியார் செய்தித் தொலைகாட்சி சேனலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் நிருபர் ஷாலினி நேற்று திண்டுக்கல்லில் ஒரு கார் விபட்டில் உயிரிழந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஷாலினியின் குடும்பத்துக்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிருபர் ஷாலினி மற்றும் நண்பர்கள் திண்டுக்கல்லிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, மதுரை திண்டுக்கல் ரோட்டில், பொட்டிகுளம் அருகே கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில், காரில் பயணம் செய்த ஷாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தகவல் அறிந்தேன்.

ஷாலினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஷாலினி குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக-வின் செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக தலைவர் டிடிவி.தகினகரன் ஆகியோர் ஷாலினியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You'r reading கார் விபத்தில் உயிரிழந்த பெண் நிருபர்- தமிழக அரசு நிதியுதவி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்