உலக முதியோர் தினம்-கொண்டாட்டங்கள் தேவையில்லை பாசம் மட்டும் போதும்

மரணம் எல்லோருக்கும் ஒரு நாள் வருவதுதான் இன்றோ நாளையோ, அதனை மறந்து விட்டும் வாழும் மனித மிருகங்களாக மாறிப்போனது மறுக்க முடியாத உண்மை. இறுதி ஊர்வலம் செல்லும் போது அரசனே ஆனாலும் இறங்கி நின்று வழி விட்டு சென்ற சமுகத்தில்தான் நாம் வாழ்ந்தோமா என்று வியப்பாக இருக்கிறது.

தள்ளாடும் வயதில் இருக்கும் முதியவர்களை குழந்தை போல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் தஞ்சையில் நடந்துள்ள சம்பவம் பெரும் அவலத்தை தான் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் நேற்று அதிகாலையில் சாலையோரத்தில் வயதான மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தவரை பார்த்த பொதுமக்கள் கண்டும் காணாததுமாய் நடந்து சென்றுள்ளார்கள், இவ்வாறு சில மணி நேரங்கள் கடந்து போக சமுக ஆர்வலர்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்ததும் சாலையோரத்தில் இறந்துபோன மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்வதற்காக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூன்று சக்கர குப்பை வண்டியோடு வந்தனர். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். அந்த மூதாட்டியின் பெயர், விலாசம் குறித்த எந்த விபரங்களும் தெரியவில்லை. உலக முதியோர் தினம் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடந்த வேதனையான சம்பவம் இது.

அவர் மூதாட்டி மட்டும் அல்ல பாட்டி, தாய், மாமியாரக இருந்து இருக்க வேண்டியவர். அவர்கள் நலமுடன் இருக்கும் காலத்தில் தனது உழைப்பு மொத்ததையும் பிள்ளைகளுக்காக செலவிட்டு வாழ்க்கையை கடந்தவர்கள் பெற்றோர்களின் துணை பிள்ளைகளுக்கு தேவையில்லை என்னும் போது அவர்கள் சமுகத்தில் தனிவிடுவது மிருகங்களை விட மோசமான செயல்பாடு. பிள்ளைகளுக்கு பேரக்குழந்தைகளுக்கு பணத்தையும் பாசத்தை அள்ளி தந்தவர்களுக்கு இதான் நிலை என்றால் இனி யார் மீதும் பாசம் வைக்க தோன்றுமா? நாம் நாட்டில் வாழ்கிறோமா இல்லை அடித்து தின்னும் காட்டில் வாழ்கிறோமா?

கூட்டுக்குடும்பம் தாய் பாசம் எல்லாம் நீங்கள் ஒரு நிலைக்கு வரும் வரை என்றால் அவர்கள் ஏன் தங்கள் உழைப்பையும் வாழ்க்கையையும் உங்களுக்காக வாழவேண்டும்.

கல்லானே யானாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயில் என்ற பாட்டைப்போல் பணம் இருந்தால் தான் பாசம் என்று ஆகிவிட்ட நிலை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். இனி போலியான கொண்டாட்டங்கள் தேவையில்லை பாசம் மட்டும் போதும்.

You'r reading உலக முதியோர் தினம்-கொண்டாட்டங்கள் தேவையில்லை பாசம் மட்டும் போதும் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சபரிமலைக்கு மீண்டும் போகப்போறேன் – அதிதி பாலன் அதிரடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்