ஆயுதபூஜை கொண்டாடும் முன் அதன் வரலாறு தெரிந்துகொள்வோம்!

ayudha pooja history name Reason

ஆயுதபூஜை கொண்டாட்டம் என்றால் விடுமுறை என்றும் நாம் செய்யும் தொழில் கருவிகளை வைத்து சாமி கும்பிடுவது என்றும் நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஆயுத பூஜையின் இருவேறு பட்ட வரலாற்றை இங்கு தெரிந்துகொள்வோம்.

 

கலிங்கப்போர் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், அந்த போரின் தாக்கத்தால் தான் மாமன்னர் அசோக சக்கரவர்த்தி இனி ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்தி ஒரு போதும் உயிர்களை கொல்ல மாட்டேன் மற்றவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று என்று புத்தபிக்கு சத்தியம் செய்தார்.

அன்று இரத்தக்கறை பதிந்த ஆயுதங்களை கழுவி தூய்மை செய்து இனி ஒரு உயிர்களையும் கொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்ததின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஆயுதங்களை தூய்மைபடுத்தி பூஜை செய்து சத்தியம் செய்வார். அனைவரையும் அவ்வாறு செய்ய சொன்னார் அந்த நாளே ஆயுதபூஜை தினமாக கொண்டாடப்பட்டது. அசோக மன்னன் ஆயுதம் களைதல் என்னும் பெயரால் வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வந்தது என்பது ஒரு வரலாறு.

மேலும் சிலர் பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நாடு இழந்து, பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தடியில் மறைத்து வைத்திருந்தனர்.

பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

You'r reading ஆயுதபூஜை கொண்டாடும் முன் அதன் வரலாறு தெரிந்துகொள்வோம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து: 6 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்