தமிழகத்தில் பரவலாக கனமழை...

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கிய மழை காலை வரை நீடித்தது.

சென்னை மாநகர பகுதியான நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், தியாகராயநகர், போரூர், கிண்டி, வேளச்சேரி மற்றும் மாநகரின் பல இடங்களில் மழையின் தாக்கம் இருந்தது.

அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மழையின் காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையோர பள்ளங்களில் தேங்கி கிடப்பதால் ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலையோரங்களில் குளம் போல் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

You'r reading தமிழகத்தில் பரவலாக கனமழை... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்