`9 சிக்ஸ்ர், 7 பவுண்டரி - இந்திய பௌலர்களை விளாசிய மேக்ஸ்வெல் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

india lost t20 series against australia

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பந்துவீச தீர்மானித்தது. இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக தவான் அணியில் இடம்பிடித்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் அதிரடி காட்ட, மற்றொரு வீரரான ஷிகர் தாவன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14 ரன்கள் எடுத்த நிலையில் தவான் விக்கெட்டை பறிகொடுத்தாலும் ராகுல் தொடர்ந்து அதிரடி காட்டினார். சிக்ஸர்களாக விளாசிய அவர், 47 ரன்களில் அவுட் ஆகி அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

தொடர்ந்து ஆடிய கேப்டன் கோலி மற்றும் தோனி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது. சவாலான இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஷார்ட் - ஸ்டோனிஸ் ஜோடி ஓப்பனிங் கொடுத்தது. ஸ்டோனிஸ் விரைவாக அவுட் ஆக ஷார்ட் 40 ரன்கள் எடுத்தார். இதன்பின் கேப்டன் பின்ச் சொதப்பினாலும், அதிரடி வீரர் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினார். இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த அவர், டி20 போட்டிகளில் மூன்றாவது சதம் அடித்தார். இவரின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் 9 சிக்ஸ்ர், 7 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்தார்.

You'r reading `9 சிக்ஸ்ர், 7 பவுண்டரி - இந்திய பௌலர்களை விளாசிய மேக்ஸ்வெல் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'இரட்டை இலை வழக்கில் நாளை தீர்ப்பு'...! யாருக்கு சாதகம் என அதிமுக, அமமுகவில் பெரும் எதிர்பார்ப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்