தடகளத்தில் புதிய உலக சாதனை - 17 ஆண்டு கால சாதனை முறியடிப்பு

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஜார்ஜியாவின் கிறிஸ்டியன் கோல்மேன் 06.39 விநாடிகளில் 60 மீட்டரை கடந்து உலக சாதனைப் படைத்துள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஜார்ஜியாவின் கிறிஸ்டியன் கோல்மேன் 06.39 விநாடிகளில் 60 மீட்டரை கடந்து உலக சாதனைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தின் கிலெம்சன் பல்கலைக்கழகத்தில் உலக அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது.

இந்த தடகள தொடரில் 60 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜார்ஜியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் கோல்மேன் 6.37 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மெரிஸ் கிரினி 60 மீட்டர் தூரத்தை 6.39 வினாடிகளில் கடந்து சாதனைப் படைத்தார். மெரிஸ் கிரினியின் சாதனை தடகள உலகில் சுமார் 17 ஆண்டு காலம் வெற்றி நடையுடன் வலம் வந்தது.

இந்நிலையில் இந்த 17 ஆண்டுகால சாதனையை கிறிஸ்டியன் கோல்மேன் தற்போது முறியடித்துள்ளார். கிறிஸ்டியன் கோல்மேன் ஏற்கெனவே 100 மீட்டர் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தடகளத்தில் புதிய உலக சாதனை - 17 ஆண்டு கால சாதனை முறியடிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேருந்து கட்டண உயர்வு: போராட்ட களத்தில் மாணவர்கள் படை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்