ஐதராபாத் ஒரு நாள் போட்டி - டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்!

India Australia 1st one-day match, Australia batting

ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸி.கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டாய்னிஸ், கவாஜா ஜோடி களம் இறங்கியுள்ளனர். பேட்டிங்குக்கு சாதகமான ஐதராபாத் மைதானத்தில் ஆஸ்திரேலியா ரன் குவிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உலகக் கோப்பை போட்டிகளுக்கு முந்தைய ஒரு நாள் தொடர் என்பதால் இந்திய வீரர்கள் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்

You'r reading ஐதராபாத் ஒரு நாள் போட்டி - டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திண்டுக்கல் லோக்சபா தொகுதியை கை கழுவுகிறது திமுக? கார்த்தி சிதம்பரம் போட்டி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்