இரண்டு ரன்னில் தோல்வி - இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து மகளிர் அணி

England beat India 3-0 in t20 series

இங்கிலாந்து அணி உடனான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கவுகாத்தி நகரத்தில் நடந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்தியா இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் வியாட் 24 ரன்களும், டாமி பியூமோன்ட் 29 விக்கெட் கீப்பர் எமி எல்லன் ஜோன்ஸ் 26 ரன்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுக்கப்பட்டது. 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். இருப்பினும் மற்றவர்கள் சொதப்பலாக விளையாடினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனால் 118 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 58 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியாவை 3-0 என்று ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து. நேற்றைய போட்டியில் இந்திய ஆண்கள் அணி தோற்ற நிலையில் இன்று மகளிர் அணியும் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading இரண்டு ரன்னில் தோல்வி - இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து மகளிர் அணி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாகுபலி 3இல் நடிக்க ஆசை – பிரபல ஹாலிவுட் நடிகர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்