ஆஸி.யை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா? மொகாலியில் இன்று 4-வது ஒரு நாள் போட்டி

India Australia 4th one day match today

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ள இந்தியா இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி, ராஞ்சியில் நடந்த 3-வது போட்டியில் வெற்றியை கோட்டைவிட்டது.

இந்திய அணியில் ரோகித் சர்மா -தவான் துவக்க ஜோடி இத்தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இதனால் இன்றைய போட்டியில் தவானுக்குப் பதில் லோகேஷ் ராகுல் களமிறக்கப்படலாம்.


அதே போன்று அம்பதி ராயுடுவும் வாய்ப்புகளை வீணாக்கி வருகிறார். இத்தொடரில் கேப்டன் கோஹ்லி தொடர்ந்து கலக்கி வருகிறார். நல்ல பார்மில் உள்ள கோஹ்லி இன்றைய போட்டியிலும் சாதிக்கும் பட்சத்தில் இன்றைய போட்டியில் இந்தியா வெல்ல வாய்ப்பு உள்ளது.

கடைசி இரு போட்டிகளில் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரிஷப் பாண்ட்டுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அவரும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினால் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிட்டும்.

தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதே வேளையில் தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும் போராடும் என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

You'r reading ஆஸி.யை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா? மொகாலியில் இன்று 4-வது ஒரு நாள் போட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராஜஸ்தான் எல்லையில் பாக்-ன் 3-வது ஆளில்லா வேவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்