கேப்டனாக மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்து வருகிறது.

இதன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய கேப்டன் விராட் கோலி 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் மூலம் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மகேந்திர சிங் தோனியை முந்தியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி 60 [96 இன்னிங்ஸ்] போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று 3454 ரன்களை குவித்திருந்தார். ஆனால், விராட் கோலி இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் [57 இன்னிங்ஸ்] 3456 ரன்கள் குவித்துள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக சுனில் கவாஸ்கர் 47 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று 3449 ரன்கள் எடுத்துள்ளார்.

You'r reading கேப்டனாக மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எதிர்ப்புகளுக்கு மத்தியில் ‘பத்மாவத்’ வசூல் சாதனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்