கவுரவ லெப்டினென்ட் கர்னலாக உதவும் தோனி - சிஎஸ்கேவின் அசத்தல் முயற்சி

Csk helps pulwama attack matrayers

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் 2019 சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 23-ந்தேதி நாளை மறுநாள் தொடங்குகிறது. முதற்கட்டமாக முதலிரண்டு வாரங்களில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், மே 5-ம் தேதி வரை நடைபெறும் ஒட்டுமொத்த லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணையை ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

சென்னையில் வைத்து நடைபெறும் இந்த ஆட்டத்தில் டிக்கெட் விற்பனையில் கிடைக்கும் அனைத்து தொகையையும் புல்வாமா தாக்குதலில் பலியானா சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘‘இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட் கர்னலாக உள்ள எங்கள் அணியின் கேப்டன் இதற்கான காசோலையை வழங்குவார்’’ என்று தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

You'r reading கவுரவ லெப்டினென்ட் கர்னலாக உதவும் தோனி - சிஎஸ்கேவின் அசத்தல் முயற்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி, கமல், அஜித் இவர்களைத் தொடர்ந்து விஜய்க்கும் அதே ஒற்றுமை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்