புல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை அணி 2 கோடி நிதியுதவி

csk donated to the CRPF to support the Pulwama martyrs families

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பும்போது ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 44 துணைநிலை ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் பலியான குடும்பங்களுக்கு பல்வேறு அமைப்பினர் தனி நபர்கள் உதவி வந்தனர். இந்தநிலையில் சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்ய முன்வந்தது. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுன் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

இந்த ஆட்டத்தில் டிக்கெட் விற்பனையில் கிடைக்கும் அனைத்து தொகையையும் புல்வாமா தாக்குதலில் பலியானா சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் என ஏற்கனவே சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கு சிஎஸ்கே அணி சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. சென்னை கேப்டன் தோனி நிதியுதவியை அளித்தார். இதேபோல் ஐபிஎல் தொடக்க விழாவுக்கான செலவுத் தொகை ரூ.20 கோடி சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

You'r reading புல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை அணி 2 கோடி நிதியுதவி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அசத்தலான ருசியில் ஆலு பராத்தா ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்