திக்... திக்... மலிங்கா ஓவர் - பெங்களூரு அணி போராடி தோற்றது

mumbai indians won by 6 runs

பரபரப்பான பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூரு அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது .

பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் மும்பை பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் 'பீல்டிங்' தேர்வு செய்தார் . மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் ,குயின்டன் டி காக்-ம் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர் . மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது .

அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி பட்டேல் 31 ரன்களிலும், மொயின் அலி 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ், மும்பை அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். நிதானமாக ஆடிய கோலி 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தநிலையில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷிம்ரோன் ஹேட்ம்யெர், கோலின் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும், டி வில்லியர்ஸ் மறுபுறம் எதிரணியின் பந்து வீச்சுகளை சிதறடித்தார்.19 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது .

கடைசி ஒரு ஓவருக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மலிங்கா இறுதி ஓவரை வீசினார். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஓவரின் கடைசி ஐந்தாவது பந்தை டிவில்லியர்ஸ் எதிர்கொண்டார். எனவே, டிவில்லியர்ஸ் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், டிவில்லியர்ஸால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி, 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது . எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியுள்ளது. மும்பை அணி, இரண்டாவது போட்டியில் வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

You'r reading திக்... திக்... மலிங்கா ஓவர் - பெங்களூரு அணி போராடி தோற்றது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரே ஆறுதல் யோகிபாபு தான்! நயன்தாரா இப்படி பண்ணலாமா? ஐரா விமர்சனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்