ஐபிஎல் இறுதி போட்டி சென்னையில் நடக்குமா? சிக்கலில் சேப்பாக்கம் ஸ்டேடியம்

ipl final match doubt chennai ground

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறுமா...? என்ற வேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் தேர்தல் திருவிழாவுடன் தற்போது ஐபிஎல் திருவிழாவும் களைகட்டி வருகிறது. கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பது கேள்விக்குறியாக உள்ளது.

தற்போதைய ஐபிஎல் போட்டி அட்டவணை படி, வரும் மே 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில்  ஐபிஎல்  இறுதிப் போட்டி நடத்தப்பட வேண்டும். ஆனால், மைதானத்தில் உள்ள ஐ.,ஜே., மற்றும் கே., பார்வையாளர் மாடங்கள் மீது தமிழக அரசு தடை தொடர்வதால், அவைகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கட்டட விதிகளை மீறி மூன்று மாடங்கள் கட்டப்பட்டுள்ளதால் கடந்த 2012ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி அவைகளுக்குத் தடையில்லா சான்று வழங்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில் மூன்று மாடங்களை காலியாக வைத்துக் கொண்டு இறுதிப் போட்டியை நடத்த முடியாது என பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. 7 நாட்களுக்குள் 3 மாடங்களைத் திறப்பதற்கான அரசின் அனுமதியைப் பெற தமிழ்நாடு  கிரிக்கெட்  வாரியத்துக்கு  பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இது தவறும் பட்சத்தில்  ஐபிஎல் இறுதிப் போட்டியை ஐதராபாத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால், மே 12-ம் தேதி சென்னையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

`அவர் இன்னும் அப்ரன்டிஸ் தான்; புத்திசாலி கேப்டன் கிடையாது' - விராட் கோலியை கடுமையாக சாடிய கம்பீர்

You'r reading ஐபிஎல் இறுதி போட்டி சென்னையில் நடக்குமா? சிக்கலில் சேப்பாக்கம் ஸ்டேடியம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராகுல் காந்தி வேணாம்..! சந்திரபாபு நாயுடு பிரதமராகணும்..!! தேவகவுடா பல்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்