`முகமது அமீருக்கு இடமில்லை - உலகக்கோப்பை பாகிஸ்தான் அணி அறிவிப்பு

fast bowler Mohammad Amir left out of Pakistans World Cup squad

உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதிபெற்றுள்ளன. லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில், தகுதிபெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையமுடியும். உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் 40 நாட்களே உள்ளதால் ஒவ்வொரு அணியும் தங்களின் வீரர் விவரங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட முக்கிய அணிகள் தங்கள் அணி வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்ட நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முக்கிய பந்துவீச்சாளர் முகமது அமிர் அணியில் இடம்பெறவில்லை. வீரர்கள் விவரம்: சர்பிராஸ் அகமது, பகர் சமான், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம், சதாப் கான், சோயிப் மாலிக், பஹீம் அஷ்ரப், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, அபித் அலி, முகமது ஹபீஸ், இமாத் வாசிம், ஜுனைத் கான், முகமது ஹசைனைன், ஹரிஸ் சோஹைல்.

You'r reading `முகமது அமீருக்கு இடமில்லை - உலகக்கோப்பை பாகிஸ்தான் அணி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குறைந்த வாக்கு சதவிகிதம் - மக்களவை தேர்தலில் 70.90% வாக்குப்பதிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்