என்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் எப்படி? - தோனியிடம் பாராட்டு பெற்ற ஹர்திக் பாண்டியா

HardikthinspPandya reveals about his helicopter shot

ஹெலிகாப்டர் ஷாட் குறித்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆக்ரோஷ பிளேயரான ஹர்திக் இந்த சீசனில் வேகப்பந்து வீச்சை குறிவைத்து அதிரடியாக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் 9 ஆட்டங்களில் ஹர்திக் பாண்டியா 218 ரன்களை 194.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இவரது அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி இக்கட்டான நிலையில் இருந்து வெற்றிக்கான ரன்னைப் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். இதற்கிடையே, இந்த சீசனில் எப்போதும் இல்லாதவாறு புதிய ஷாட்களை ஆடி வருகிறார். அந்தவகையில் முக்கியமானது தோனியின் ஹெலிகாப்டர் ஷாட். டெத் ஓவர்களில் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் எதிரணியை மிரட்டி வருகிறார் ஹர்திக்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் குறித்து பேசியுள்ளார். அதில், ``அதற்காக பல முறை பயிற்சி எடுத்துக்கொண்டேன். நான் தோனியின் அறைக்குச் சென்று என்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்றேன். அவர் நன்றாக ஆடியதாகக் பாராட்டினார். இப்போது நானே ஆச்சரியப்படும் விதத்தில் சரியாக விளையாடி வருகிறேன். இதற்காக வலையில் கடினமாகப் பயிற்சி எடுத்து வருகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்.

You'r reading என்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் எப்படி? - தோனியிடம் பாராட்டு பெற்ற ஹர்திக் பாண்டியா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோலியின் மிரட்டலான ஐந்தாவது சதம் - கொல்கத்தா அணிக்கு இமாலய இலக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்