பார்த்தீவ்வின் 13வது அரைசதம் - சென்னை அணிக்கு 162 ரன்கள் இலக்கு

Royal Challengers Bangalore scores 161 runs against chennai super kings

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூரு மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் காயம் காரணமாக களமிறங்காத தோனி அணிக்கு திரும்பியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக கரண் ஷர்மா நீக்கப்பட்டார். மேலும் சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டுவைன் பிராவோ மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல் பெங்களூரு அணியில் ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பினார். சிராஜ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.

அதன்படி பெங்களூரு அணிக்கு வழக்கம் போல பார்த்தீவ் படேல் - விராட் கோலி இணை துவக்கம் தந்தது. இந்த ஜோடி 2 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்தது. தீபக் சஹார் வீசிய 3வது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து விராட் கோலி நடையை கட்டினார். இதன்பின்னர் வந்த மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும்படியாக ஆடவில்லை. இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த பார்த்தீவ் படேல் ஐபிஎல் தொடரில் தனது 13வது அரை சதத்தை பதிவு செய்தார். ஆனால் அவருக்கு சரியான பாட்னர்ஷிப் கிடைக்கவில்லை. இறுதி நேரத்தில் மொயின் அலி அதிரடியாக விளையாடி 26 ரன்கள் சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் தீபக் சஹார்ம் ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

You'r reading பார்த்தீவ்வின் 13வது அரைசதம் - சென்னை அணிக்கு 162 ரன்கள் இலக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடியை எதிர்ப்பது யார்? மிரட்டும் எதிர்க்கட்சிகள்!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்