ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் - அடுத்த சுற்றுக்கு சாய்னா, சிந்து முன்னேற்றம்!

Saina enters second round in Asian batminton championship

39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் யுஹான் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சமீர் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் 1965-ம் ஆண்டில் இந்தியாவின் தினேஷ் கண்ணா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதன் பிறகு இந்தியர்கள் யாரும் இங்கு மகுடம் சூடியதில்லை. 54 ஆண்டுகால அந்த ஏக்கத்தை சாய்னா, சிந்து எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதற்கேற்றார் போல் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-7 என்ற நேர்செட்டில் ஜப்பானின் சயாகா தகாஹஷியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 28 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் இந்தியா 12-21, 21-11, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹான் யுவை வீழ்த்தினார்.

இவர்களை போலவே ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-13, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சகாய் கஜூமசாவை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 16-21, 20-22 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரெனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். அடுத்த போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் இந்தியாவின் பல ஆண்டு கால தாக்கத்தை தணிக்க கூடிய வாய்ப்பு ஏற்படும்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனை சாதனை! -இந்தியாவுக்கு முதல் தங்கம்

You'r reading ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் - அடுத்த சுற்றுக்கு சாய்னா, சிந்து முன்னேற்றம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பந்தை மறந்த அம்பயர்.... கலாய்த்த வர்ணணையாளர்கள்.... பெங்களூரு போட்டியில் நடந்த சுவாரஸ்யம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்