நீங்க ரொம்ப பணிவா நடந்துக்கிறீங்க கோலி - விருது கொடுத்து உரசி பார்க்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்

Kuch Bhi Award to Virat Kohli

கோலி விருது ஒன்றை அறிவித்து அவரை விமர்சித்துள்ளது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

கடந்த சீசன் முதல் அஸ்வின் தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி செயல்பட்டு வருகிறது. கடந்த சீசனில் ஓரளவுக்கு தாக்குபடித்த அந்த அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இன்னும் அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த அணி விமர்சனத்தை சந்தித்துள்ளது. அந்த அணியின் வலைதளத்தில் இன்று தகவல் பதிவிடப்பட்டிருந்தது. அதில் ஐபிஎல் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு விருது பட்டியல் ஒன்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதலில் இருப்பது விராட் கோலி தான். அவருக்கு ஸ்டூவர்ட் போர்டு ஹூமிலிட்டி என்ற அவார்ட் ( Stuart Broad Humility Award) வழங்கியுள்ளது. இது பணிவுக்கான விருது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடவே எதற்காக இந்த விருதுகள் கொடுக்கப்பட்டது என்ற விவரமும் கொடுப்பட்டுள்ளது. அதில், கடந்த 24-ம் தேதி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது அந்த அணியின் கேப்டன் அஷ்வின் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது, அஷ்வினை பார்த்து என்ன செய்ய முடியும் என்பது போல அவர் சைகை காண்பித்தார். இதற்காகவே இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்னும் பல வீரர்களுக்கு அந்த அணி விருது கொடுத்துள்ளது. இதில் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது .

விஜய்-கத்ரீனா கைஃப் ட்ரெண்டிங்...! காரணம் என்ன தெரியுமா?

You'r reading நீங்க ரொம்ப பணிவா நடந்துக்கிறீங்க கோலி - விருது கொடுத்து உரசி பார்க்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெறும் வயிற்றில் பழம் சாப்பிடுவது நல்லதா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்