போதை மருந்து உட்கொண்டது உறுதியானது... இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் அதிரடி நீக்கம்

alex Hales dropped from England world cup squad

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. போட்டிகள் தொடங்க சரியாக 30 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த உலகக்கோப்பையை பொறுத்தவரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு காரணம் இந்திய அணியின் சமீபத்திய பார்ம் மட்டுமில்லாமல் இங்கிலாந்தில் உலகக்கோப்பை போட்டிகள் நடப்பதும் தான். கிரிக்கெட்டை தாங்கள் தான் கண்டுபிடித்தோம் எனக் கூறும் இங்கிலாந்து இதுவரை ஒரு முறை கூட உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தத்தில்லை. அந்த சோகத்தை போக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அதற்காக திறமையான அணியை அறிவித்திருந்தது.

இந்நிலையில் இதில் திடீர் மாற்றமாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் போதைமருந்து பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த சோதனையில் அவர் போதைமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் உலகக்கோப்பை போட்டிகளிலில் விளையாட முடியாது. ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் உடன் மது பாரில் சண்டையிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் இப்போது தடை விதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

என்னால முடியல... மிஸ் பண்ணுறேன்... - சுனில் நரேன் வருத்தம்

You'r reading போதை மருந்து உட்கொண்டது உறுதியானது... இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் அதிரடி நீக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடும்பத்துடன் முதன்முறையாக வாக்களித்த சச்சின் டெண்டுல்கர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்