`வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் பிசிசிஐயின் புதிய கோரிக்கை - ஒத்திவைக்கப்பட்ட பயணம்

Indias tour of West Indies which was starts two weeks later

இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் 30ஆம் தேதி முதல், ஜூலை 14ஆம் தேதி வரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் முடிந்ததும், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த திட்டத்தில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை வெஸ்ட் இண்டீஸ் கிரிகெட்வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலம், இந்த சுற்றுபயணம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளுடன் டி20 போட்டிகளும் இடம்பெற உள்ளன. அத்துடன் மூன்று நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி போட்டியையும் சேர்க்கும்படி பிசிசிஐ கூறியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து இன்னும் முழுமையான அறிவிப்பு வெளியாகவில்லை.

You'r reading `வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் பிசிசிஐயின் புதிய கோரிக்கை - ஒத்திவைக்கப்பட்ட பயணம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உடல்நலக்குறைவால் மோடியின் சகோதரர் மனைவி மரணம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்