சச்சின் மகள் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கிய வாலிபர்!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் மகள் சாராவின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கை துவங்கிய மும்பை வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் மகள் சாராவின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கை துவங்கிய மும்பை வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சச்சின் மகள் சாரா லண்டன் நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் சச்சினின் மகள் சாராவின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு செயல்பட்டு வருவதாக மும்பை சைபர் கிரைம் காவல்துறையிடம் சச்சினின் தனி உதவியாளர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மும்பையின் அந்தேரி பகுதியில் தங்கியிருந்த நிதின் சிஷோடி [39] என்பவரை மும்பை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிதின் மீது ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல் மற்றும் அவதூறு ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போலி டுவிட்டர் கணக்கில் ஏராளமான அரசியல் பதிவுகள் இடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஷர்தா பவார் குறித்து தவறான கருத்துக்களை நிதின் பதிவு செய்துள்ளார். அதற்கு பிறகு ஏராளமான பின்னூட்டங்கள் வந்த பிறகுதான் இது சச்சினின் மகளுடையது அல்ல என்பது தெரியவந்தது. ஏனெனில் சாராவுக்கு அரசியல் ஆர்வம் எதுவும் இருந்தது கிடையாது.

You'r reading சச்சின் மகள் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கிய வாலிபர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வில்லிவாக்கத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: தென்னக ரயில்வே தொழிற்சங்க தலைவர் வெட்டி கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்