உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸி.க்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்

World Cup cricket, India batting first in oval match against Australia

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, தொடரில் 2-வது வெற்றியை இந்தியா பதிவு செய்யுமா? அல்லது ஆஸி.அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பை இந்தப் போட்டி ஏற்படுத்தியுள்ளது.

 


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தெ.ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.

இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில்,இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக, ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கியுள்ளனர்.
முதல் போட்டியில் தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தியது போல ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை இந்திய அணி பெறுமா? என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


அதே நேரத்தில் ஆஸ்திரேலியா இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருவதால் இன்றைய போட்டி சவாலாகவே இருக்கும் என்று தெரிகிறது. இந்த தொடரில் தான் ஆடிய இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. ஆப்கனை 7 விக்கெட் வித்தியாசத்திலும், மே.இந்தியதீவுகளை 15 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றுள்ள ஆஸி.அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய, இந்தியாவுடன் கடும் பலப்பரீட்சை நடத்தும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நடந்துள்ள ஆட்டங்களில், ஆஸ்திரேலியா அணியே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இரு அணிகளும் மோதிய 11 ஆட்டங்களில் ஆஸி.அணி 8 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

You'r reading உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸி.க்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி... ஓய்வு பெற்ற நர்ஸ் பாட்டியுடன் சந்திப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்