மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சு மழையால் 43 ஓவராக குறைப்பு

India bowling first in the 1st one day match against WI

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால் 43 ஓவர் போட்டியாக நடைபெறுகிறது.

மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது.இந்த 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று இந்திய அணி சாதித்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. கயானாவில் நடைபெறும் முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக தாமதமாகியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமான நிலையில், 43 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி. கேப்டன் கோஹ்லி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், மே.இந்திய தீவுகள் பேட்டிங் செய்து வருகிறது. டி20 தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள இந்திய அணி வீரர்கள், ஒரு நாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.

You'r reading மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சு மழையால் 43 ஓவராக குறைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேலூரில் வெற்றி யாருக்கு..? நாளை வாக்கு எண்ணிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்