இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு..?

Interview for Indian cricket teams head coach begins, advantage for Ravi Shastri again

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல்தொடங்கியுள்ளது. தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரவி சாஸ்திரி இருந்து வ கிறார். அவருடைய பதவிக் காலம் கடந்த உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. ஆனால் தற்போது மே.இ.தீவுகள் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளதால், அவருடைய பதவிக் காலம் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டியில் முன்னாள் வீரர் அன்சுமன் கெய்க்வாட், முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சர்வதேச அளவில் முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை பரிசீலித்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹேசன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டாம் மூடி, மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பில் சிம்மன்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின்சிங் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகிய 6 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்க முடிவு செய்தது.

இந்நிலையில் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகத்தில் கபில் தேவ் தலைமையில் இன்று நடை பெற்று வருகிறது. ரவி சாஸ்திரி தவிர்த்து மற்ற 5 பேரிடமும் நேர்காணல் நடத்தப்படுகிறது. மே.இ.தீவுகள் சுற்றுப் பயணத்தில் உள்ள ரவிசாஸ்திரியிடம் ஸ்கைப் மூலம் நேர்காணல் நடத்துகின்றனர். இன்றே நேர்காணல் முடிவடைந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை அறிவிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், உலககோப்பை தொடரில் அரையிறுதியில் கோட்டை விட்டது ஒன்றைத் தவிர, டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டிகளில் இந்திய அணி பல வெற்றிகளை குவித்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த ரவி சாஸ்திரியே மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் எடுத்த கோஹ்லி-ஐயர் ஜோடி ; மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா

You'r reading இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு..? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காஷ்மீரில் அலுவலகங்கள் இன்று முதல் செயல்படும்; பள்ளிகள் 19ம் தேதி திறப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்