ஆன்டிகுவா டெஸ்ட் மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கு ஆல் அவுட்

Antigua test, WI all-out for 222 runs in first innings, India leads 75 runs

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 75 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது.

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி, நேற்று 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. ஹோல்டர் (10), கம்மின்ஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 3-ம் நாள் ஆட்டத்தில் இருவரும் மிகப் பொறுமையாக ஆடினர். இருவரும் 41 ரன் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில் ஹோல்டர் (39) சமியிடம் வீழ்ந்தார். தொடர்ந்து ஜடேஜாவின் பந்து வீச்சில் கம்மின்ஸ் (0) அவுட்டாக 22 ரன்களுக்கு மே.இ.தீவுகள் ஆல் அவுட்டானது.45 பந்துகளை சந்தித்த கம்மின்ஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் மோசமான ஒரு சாதனையை இந்தப் போட்டியில் படைத்தார். இந்தியத் தரப்பில் இஷாந்த் (5), ஜடேஷா, ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் மே.இ.தீவுகளை விட 75 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. உணவு இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 8 ரன்களுடனும், ராகுல் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

You'r reading ஆன்டிகுவா டெஸ்ட் மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கு ஆல் அவுட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அருண் ஜெட்லி மறைவுக்கு அஞ்சலி ; கறுப்பு பட்டை அணிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்