ldquoஎல்லாமே அனுஷ்காrdquo - மனைவியை உச்சி முகரும் கணவர் விராட்!

"எனது மனைவி அனுஷ்கா அளித்த உற்சாகத்தால் மட்டுமே என்னால் தொடர்ந்து பயணிக்க முடிகிறது" எனக் காதல் மனைவிக்குப் புகாழாரம் சூட்டியுள்ளார் இந்தியக் கேப்டன் விராட் கோலி.

2017-ம் ஆண்டில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தத் திருமணம் விருஷ்கா ஜோடியின் திருமணம். காதலித்த காலத்திலும் சரி தங்கள் திருமண நிகழ்வைக் கொண்டாடியதிலும் சரி எந்தவொரு காரணத்துக்காகவும் இருவரின் விருப்பங்களை மீறி எந்த ஊடகத்தாலும் இடையில் புக முடியவில்லை.

'காதலி அனுஷ்காவால்தான் விராட் ஆட்டத்தில் கவனம் செலுத்தவில்லை' என உலகமே திரண்டு வந்து அனுஷ்கா மீது பழியைக் கொட்டியபோது, ஆக்ரோஷ விராட் வாய் ஜாலத்தால் ஆக்ரோஷப்படவில்லை. தன்னால் அனுஷ்காவுக்கு ஏற்பட்ட பழிக்குத் தானே ரன் மிஷினாக உருவாகி சர்வதேச வாய்களை ஒரு பறக்கும் முத்தத்தினால் அடைத்தார்.

ஆக்ரோஷ விராட் எனப் பெயரெடுத்தவருக்குக் கேப்டன் பதவியா என்ற கேள்விக்குத் தனது நிதானமான தலைமையினால் அணியை உயர்த்திப்பிடித்து பதிலளித்தார். இத்தாலியில் அனுஷ்காவுடன் திருமணம், அதைத்தொடர்ந்த தேனிலவு என மனைவிக்கான நேரத்தை சரியான நேரத்தில் அளித்த கணவர் விராட், திருமணம் முடிந்த பதினைந்தாவது நாள் மீண்டும் தன் கிரிக்கெட் அணிக்காகக் கேப்டனானக் களமிறங்கினார். 

முன்பை விடவும் அதிக ஆக்ரோஷப்பட்டார். களத்தில், விளையாட்டில், ரன் எடுப்பதில் என சரியான விதத்தில் ஆக்ரோஷப்பட்டார். ஆனால், தன் அணி வீரர்களிடமும் எதிரணி விரர்களிடமும், ரசிகர்களிடமும் ஆக்ரோஷப்படக் காரணம் தேடுவதைத் தவிர்த்தார். இன்று வெற்றிகரமாக 35 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த கேப்டனாக உயர்ந்து நிற்கும் விராட், "எனது பயணத்தில் என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே என் முன்னேற்றத்தை உறுதிபடுத்துபவர் மனைவி அனுஷ்கா" எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "ஒரு பெரிய அணியை முன் நின்று வழி நடத்துவது என்பது மிகப்பெரிய உணர்வு. என் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் கண்டிப்பாக எட்டு முதல் ஒன்பது ஆண்டுகள் வரையில் விளையாட முடியும். கடவுளின் அருளால் எனக்கு நல்ல உடல்நிலை உள்ளது. இந்த சூழலில் எந்தளவு தணிந்து களத்தில் நீடிக்கிறேனோ அந்தளவு என்னால் சிறப்பான பங்களிப்பை எனது அணிக்கு அளிக்க முடியும்" எனக் கூறியுள்ளார்.

You'r reading ldquoஎல்லாமே அனுஷ்காrdquo - மனைவியை உச்சி முகரும் கணவர் விராட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய இந்திய இளம் பட்டாளம்: 5-1 என தொடரை வென்று சாதனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்