டி 20 போட்டிகளில் புதிய சாதனை: புவனேஷ்வர் குமாரின் அதிரடி பந்துவீச்சுக்கு மகுடம்

புவனேஷ்வர் குமாரின் அதிரடி பந்துவீச்சுக்கு மகுடம்

இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது அதிரடி பந்துவீச்சால் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் தனது அதிரடி பந்துவீச்சின் மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளார் புவனேஷ்வர் குமார்.

டி 20 போட்டியில் குறைவான ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார் புவனேஷ்வர். 24 ரன்களை மட்டுமே விட்டவர் ஐந்து விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் வென்றுள்ளார்.

இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவார் புவனேஷ்வர். மேலும், டி 20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இரண்டாவது பந்துவீச்சாளர் ஆவார்.

இதற்கு முன்னர் இச்சாதனையை நிகழ்த்தியவர் இந்திய அணியின் பந்துவீச்சாளர் சஹால் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading டி 20 போட்டிகளில் புதிய சாதனை: புவனேஷ்வர் குமாரின் அதிரடி பந்துவீச்சுக்கு மகுடம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 97-வது பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்