என்னவாகும் அதிரடி மன்னன் பென் ஸ்டோக்ஸின் எதிர்காலம்... ஜோ ரூட் சூசகம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், சில மாதங்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கம்-பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில், அவரது எதிர்காலம் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பேசியுள்ளார்.
 
சென்ற ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீர‍ர் பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் அணிக்கான துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அவரும் டெஸ்ட் மட்டுமின்றி, கிடைக்கும் எல்லா போட்டிகளிலும் கலக்கினார். இதனால், சீக்கிரமே அவர் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பதவி உயர்வு பெறுவார் என்று ஆருடம் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பகுதியில் இருவருடன் கைகலப்பில் ஈடுபடவே, அவர் அணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும் அவர் மீது இரண்டு வழக்குகளும் பதியப்பட்டன. இதனால் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த ஆஷஸ் தொடரிலும் அவர் பங்கு பெறமுடியவில்லை. 
 
பென் ஸ்டோக்ஸின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனத்துககு வந்துவிட்டது என்று சிலர் முணுமுணுத்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பான கம்-பேக் கொடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவருக்கு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெடடில் துணை கேப்டன் பதவி கொடுக்கப்படுமா என்பது குறித்து ரூட் பேசியுள்ளார். `பென் ஸ்டோக்ஸை மீண்டும் டெஸ்ட் துணை கேப்டனாக்குவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவிலலை. அது பற்றி பயிற்சியாளருடன் கலந்தாலோசிதது முடிவெடுக்கப்படும். ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அது மகிழ்வளிக்கிறது' என்று விவதரித்துள்ளார் ரூட். 
 
 
 
 
 
 

You'r reading என்னவாகும் அதிரடி மன்னன் பென் ஸ்டோக்ஸின் எதிர்காலம்... ஜோ ரூட் சூசகம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மண் பயனுற வேண்டும் - நமது பாரம்பரியம் பகுதி - 3

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்