49204084041 இது ஓடிபி அல்ல இந்திய வீரர்கள் எடுத்த ரன்களை கிண்டலடிக்கும் வீரேந்திர சேவாக்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளது. வெறும் 36 ரன்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்தனர். இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தை கிண்டலடித்து சமூக இணையதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்களை வரிசைப்படுத்தி முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கும் கிண்டலடித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றைய நாளை ரசிகர்களும், வீரர்களும் எளிதில் மறக்க வாய்ப்பில்லை.

இன்றைய தினத்தை இந்திய கிரிக்கெட்டின் ஒரு கருப்பு நாளாகக் கூட கருதலாம். ஏனென்றால் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியா ஆடிய ஆட்டம் அவ்வளவு மோசமாக இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணியில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை எடுக்க முடியவில்லை. இன்றைய போட்டியில் இந்தியா எடுத்த 36 ரன்கள் தான் இதுவரை டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மிக குறைந்த ஸ்கோர் ஆகும்.

கடந்த 46 வருடங்களுக்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா எடுத்த 46 ரன்கள் தான் இதுவரை மிகக்குறைந்த ஸ்கோர் ஆக இருந்தது.இந்தியாவின் இன்றைய மோசமான ஆட்டத்திற்கு வீரேந்திர சேவாக், வாசிம் ஜாபர் உள்பட பல முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் எடுத்த ரன்களை வரிசைப்படுத்தி, இது ஞாபகத்தில் வைக்க வேண்டிய ஓடிபி எண் அல்ல, மறக்க வேண்டிய ஓடிபி ஆகும் என்று சேவாக் கிண்டலுடன் குறிப்பிட்டுள்ளார். சமூக இணையதளங்களிலும் இந்திய வீரர்களை கிண்டலடித்து மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. இந்திய வீரர்களின் ரன்களை வரிசைப்படுத்தி, இதில் நைட் வாட்ச்மேன் அடித்த ஸ்கோர் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியுமா? என்றும் சிலர் கிண்டலடித்துள்ளனர்.

You'r reading 49204084041 இது ஓடிபி அல்ல இந்திய வீரர்கள் எடுத்த ரன்களை கிண்டலடிக்கும் வீரேந்திர சேவாக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா தடுப்பூசி இந்தியர்கள் தயக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்