சிந்துவுக்கும் சாய்னாவுக்கும் இடையில் நடக்கப்போகும் காமன்வெல்த் இறுதிப் போட்டி!

21-வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்களுக்கான பாட்மிட்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியர்கள் இருவர் மோதுகின்றனர். பெண்களுக்கான பேட்மிட்டன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவர் சாய்னா நேவால். அதேபோல ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றவர் பி.வி.சிந்து.

நேவால் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் எப்போதாவது உள்ளூர் போட்டி நடக்கும் போதே பொறி பறக்கும். தற்போது இருவரும் மோதும் சர்வதேச போட்டி ஒன்று நடக்க உள்ளது. ஆம், 21-வது காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நேவாலும் சிந்துவும் மோதுகின்றனர்.

எப்படியும் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் இந்தியாவுக்குதான் என்பது இவர்களது போட்டியின் மூலம் உறுதியாகி இருக்கிறது. மேலும், ஆடவர் ஒற்றையர் பிரிவு பாட்மிட்டன் இறுதிப் போட்டிக்கு உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சிந்துவுக்கும் சாய்னாவுக்கும் இடையில் நடக்கப்போகும் காமன்வெல்த் இறுதிப் போட்டி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உரிமையைப் பெற போராட்டம்; மேலாண்மை வாரியம் அமைக்க முழக்கம் - ரஜினி, கமல் புத்தாண்டு வாழ்த்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்