இந்தியா 337 ரன்களில் ஆல் அவுட் 241 ரன்கள் பின்னிலை மீண்டும் விளையாடும் இங்கிலாந்து

சென்னை டெஸ்டில் இந்தியா இன்று முதல் இன்னிங்சில் 337 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்தை விட இந்தியா 241 ரன்கள் பின்தங்கியுள்ளது. பாலோ ஆன் பெற்ற போதிலும் இங்கிலாந்து பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அஷ்வின் வீசிய முதல் பந்தில் பர்ன்ஸ் ஆட்டமிழந்தார்.சென்னை டெஸ்டில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 578 ரன்களை குவித்தது. இந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாக இரட்டை சதம் அடித்தார்.

இவர் 218 ரன்களில் ஆட்டமிழந்தார். சிப்லி 87 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் எடுத்தனர். இதன் பின்னர் இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்சை விளையாடத் தொடங்கியது. ஆனால் இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். ரோகித் சர்மா 6 ரன்களிலும், கில் 29 ரன்களிலும், புஜாரா 73 ரன்களிலும், கேப்டன் கோஹ்லி 11 ரன்களிலும் ரகானே 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ரிஷப் பந்த் சிறப்பாக ஆடி 91 ரன்கள் குவித்தார். நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 257 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களிலும், அஷ்வின் 8 ரன்களிலும் ஆடிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. வாஷிங்டன் சுந்தரும், அஷ்வினும் சிறப்பாக ஆடினர். அஷ்வின் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஷஹ்பாஸ் நதீம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷாந்த் ஷர்மா 4 ரன்களிலும், பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 85 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இந்தியா 337 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா, ஆஸ்திரேலியாவை விட 241 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்தியா பாலோ ஆன் பெற்ற போதிலும் இங்கிலாந்து மீண்டும் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக சிப்லியும், பர்ன்சும் களமிறங்கினர். முதல் ஓவரை அஷ்வின் வீசினார். முதல் பந்திலேயே ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரன் ஏதும் எடுக்காமலேயே இங்கிலாந்து முதல் விக்கெட்டை இழந்தது. உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 1 ரன் எடுத்து எடுத்துள்ளது. தற்போது இங்கிலாந்து 241 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

You'r reading இந்தியா 337 ரன்களில் ஆல் அவுட் 241 ரன்கள் பின்னிலை மீண்டும் விளையாடும் இங்கிலாந்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சமூக வலைதளங்களில் அவதூறு பெண் டப்பிங் கலைஞரின் புகாரில் சினிமா டைரக்டர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்