ஒரே நேரத்தில் இரண்டு கோல் போடும் ரொனால்டினோ..

பிரேசில் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ, ஒரே நேரத்தில் தம் இரு காதலியரையும் மணம் புரிய இருக்கிறார்.
தற்போது 38 வயதாகும் ரொனால்டினோ, பிரிஸில்லா கோல்ஹோ என்ற பெண்ணுடன் பழகி வந்தார். 2016-ம் ஆண்டிலிருந்து பீட்ரிஸ் சௌஸா என்ற பெண்ணுடனும் பழக ஆரம்பித்தார்.
ரியோடிஜெனிரோவில் ஏறக்குறைய 45 கோடி (5 மில்லியன் பவுண்ட்) மதிப்பிலான மாளிகை ஒன்று ரொனால்டினோவுக்கு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பிரிஸில்லாவும் பீட்ரிஸூம் இந்த மாளிகையில் ரொனால்டினோவுடன் வசித்து வருகின்றனர். வரும் ஆகஸ்ட் மாதம் இருவரையும் ஒரே நேரத்தில் ரொனால்டினோ மணம் முடிக்க இருக்கிறார்.
அவரது சகோதரி டெய்ஸி தான் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஒரே நேரத்தில் இரண்டு கோல் போடும் ரொனால்டினோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்