இத்தாலி உணவு கேட்ட செரினா! இத்தாலிக்கே அழைத்துச் சென்ற கணவர்

செரினா வில்லியம்ஸ்க்கு இருக்கும் ரசிகர்களைவிட தற்போது அவரது கணவர் அலெக்ஸிஸ்-க்குத் தான் ரசிகர்கள் வட்டம் சர்வதேச அளவில் பெருகி உள்ளது.

அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ். இவர் அலெக்சிஸ் ஒஹானியன் என்ற தனது நீண்ட கால காதலரை சென்ற ஆண்டு திருமணம் செய்தார். அதற்கு முன்னதாக இத்தம்பதியினருக்கு ஒலிம்பியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை, பிரசவம், அதன் பின்னர் செரினாவின் உடல்நிலை சரியில்லாமல் போக, குழந்தை பிறந்த அடுத்த நாளே மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை எனப் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சில மாதங்களிலேயே தன் உடல் அளவிலும் மன அளவிலும் மீட்டு தற்போது விம்பிள்டனின் இறுதிப்போட்டி வரை தேர்வானார் செரினா வில்லியம்ஸ்.

இறுதிப்போட்டியில் தோற்றாலும், தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்த செரினா வில்லியம்ஸுக்கு உலகமே பாராட்டுகளைத் தெரிவித்தது. கூடவே செரினாவின் கணவர் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் பாராட்டுகள் குவிந்தது. காரணம், செரினாவின் இன்பத்திலும் துன்பத்திலும் செரினா உடன் தீர்க்கமாகப் பயணித்தவர் அலெக்சிஸ்.

தற்போது தன் மனைவி மற்றும் குழந்தை உடன் இத்தாலிய சுற்றுப்பயணத்தில் இருக்கும் அலெக்சிஸ், தங்கள் குடும்ப பயணத்துக்கான காரணத்தை சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதாவது செரினாவுக்கு திடீரென இத்தாலி வகை உணவுகளை ருசி பார்க்க வேண்டும் என ஆசையாம். அதனால் மனைவியை இத்தாஇ நாட்டுக்கே அழைத்து வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார் அலெக்சிஸ் ஒஹானியன்.

You'r reading இத்தாலி உணவு கேட்ட செரினா! இத்தாலிக்கே அழைத்துச் சென்ற கணவர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேற்குவங்க பாஜக எம்.பி. திரிணாமுல் கட்சிக்குத் தாவல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்