ஹாங்காங் ஹாக்கி அணியை கதற வைத்த இந்தியா

ஹாங்காங் ஹாக்கி அணியை இந்தியா கதற வைத்தது

ஹாங்காங் ஹாக்கி அணியை கதற வைத்த இந்தியா.ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாங்காங் அணியை 26 - 0 என்ற இமாலய வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.

பெண்களுக்கான 25 மீ. பிஸ்டல் சுடும்போட்டியில் இந்தியாவின் ரஹி சர்னோபாட் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான்கு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் எட்டு வெண்கல பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.

37 தங்கப்பதக்கம் உள்பட மொத்தம் 82 பதக்கங்களுடன் சீனா பதக்கப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. உஷூ போட்டிகளில் இந்தியாவுக்கு நான்கு வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன. 

'பி' பிரிவில் இடம் பெற்றிருக்கும் இந்திய ஹாக்கி அணி, ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. மிக எளிதாக 26 - 0 என்ற கோல் அடிப்படையில் இந்தியா வென்றுள்ளது.இதற்கு முன்பு அமெரிக்க அணியை 86 ஆண்டுகளுக்கு முன்பு 24 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதே பெரிய வெற்றியாக இருந்து வந்தது.

You'r reading ஹாங்காங் ஹாக்கி அணியை கதற வைத்த இந்தியா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஜித்தின் விசுவாசம் பர்ஸ்ட் லுக் நாளை அதிகாலை ரிலீஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்