நான் டாக்டராக விரும்பவில்லை சச்சின் டெண்டுல்கர்?

வாழ்வின் இளமை காலத்தை முழுவதும் கிரிக்கெட்டுக்காக செலவிட்டவர் கிரிக்கெட்டின் கடவுள் என அனைவருக்கும் தெரிந்த சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். கிரிக்கெட் உலகில் அனைவராலும் போற்றக்கூடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் சச்சின்.

இவருக்கு மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தின் 63வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அதன் காரணமாக அந்த பல்கலைக்கழகத்தின் சார்பாக சச்சினுக்கு கெளரவ டி.லிட் பட்டம் வழங்க இருந்தது. இந்நிலையில் சச்சின் எனக்கு பட்டம் எல்லாம் வேண்டாம் என தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்மிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி இந்த பல்கலைக் கழகம் கெளரவித்திருந்தது.

இதற்க்கு முன்பும் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக டாக்டர் பட்டம் வேண்டாம் என சச்சின் மறுத்திருந்தார்.

You'r reading நான் டாக்டராக விரும்பவில்லை சச்சின் டெண்டுல்கர்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - H4 EAD விசா புதிய சட்டம் மூன்று மாதங்களுக்குள் அறிவிப்பு! டிரம்ப் நிர்வாகம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்