மண்டியிட்டது மேற்கிந்திய அணி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் குல்தீப், அஷ்வின் என சுழற்பந்து வீச்சாளர்கள் மிரட்ட இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 என அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களையும் ஆட இந்தியா வந்துள்ள மேற்கிந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 649/9 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் முடிவில் மேற்கிந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. கீமோ பால் (13), சேஸ் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. உமேஷ் 'வேகத்தில்' கீமோ பால் (47) சிக்கினார். சேஸ் (53) அரை சதம் கடந்தார். லீவிஸ் (0), கேப்ரியல் (1) சொதப்பினர். மேற்கிந்திய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அஷ்வின் 4, முகமது ஷமி 2 விக்கெட் சாய்த்தனர்.

 

முதல் இன்னிங்சில் 468 ரன்கள் பின் தங்கியதால் மேற்கிந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்தியா 'பாலோ ஆன்' கொடுத்தது. குல்தீப் சுழல் ஜாலம் காட்டினார். இவரது பந்துவீச்சில் ஹோப் (17), ஹெட்மயர் (11) சிக்கினர். பாவெலை (83) வெளியேற்றிய குல்தீப் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார்.

 

ஜடேஜா 'சுழலில்' கீமோ பால் (15), லீவிஸ் (4) அவுட்டாகினர். கேப்ரியல் (4) ஏமாற்ற, மேற்கிந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது போட்டி வரும் 12ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவிருக்கிறது.

 

You'r reading மண்டியிட்டது மேற்கிந்திய அணி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்தியப்பிரதேசத்தில் முன்னாள்பாஜக தலைவரின் அராஜகம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்