130 ரன்னில் சுருண்டது தெ.ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு 208 ரன்கள் டார்கெட்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 130 ரன்களுக்குள் சுருண்டதை அடுத்து இந்தியாவுக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 130 ரன்களுக்குள் சுருண்டதை அடுத்து இந்தியாவுக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகப்பட்சமாக டி வில்லியர்ஸ் 65 ரன்களும், கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி 62 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 209 ரன்களுக்குள் சுருண்டது. 92 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை ஹர்த்திய பாண்டியாவின் 93 ரன்கள் கைகொடுத்தது. இல்லையென்றால், 150 ரன்களைக் கூட தாண்டி இருக்காது.

42 ஓவர்கள் தாக்குப்பிடிக்காத தென் ஆப்பிரிக்கா:

பின்னர், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. இதனிடையில் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்தது. இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்றது.

இதில் தென் ஆப்பிரிக்காவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இதனால், 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகப்பட்சமாக டி வில்லியர்ஸ் 35 ரன்களும், மார்க்ரம் 34 ரன்களும் எடுத்திருந்தனர். அந்த அணியில் 7 பேர் இரட்டை இலக்கத்தையே தொடவில்லை. இந்நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

You'r reading 130 ரன்னில் சுருண்டது தெ.ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு 208 ரன்கள் டார்கெட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இங்கிலாந்து அணி படுதோல்வி - 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்