அடிலெய்டு டெஸ்ட்: இந்தியா தடுமாற்றம்

Will India won in Adelaide Test

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தற்போது துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை மழையின் காரணமாக வெல்ல முடியாமல் சமன் செய்தது.

இன்று முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடக்கிறது. இந்திய நேரப்படி அதிகாலையில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், கேப்டன் விராத் கோலி டாஸ் வென்றார். டாஸ் வென்ற அவர், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனால், இந்திய அணி முதலில் மைதானத்துக்குள் களமிறங்கியது. ஆனால், துவக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய், லோகேஷ் ராகுல் மற்றும் கேப்டன் கோலி ஆரம்பத்திலேயே அவுட்டாகி இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்துள்ளனர்.

லோகேஷ் ராகுல் 8 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 2 ரன்களில் ஹசில்வுட் பந்துவீச்சில் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 22 பந்துகளை எதிர்கொண்ட முரளி விஜய் ஸ்டார்க் பந்துவீச்சில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெய்னிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி, 16 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், பாட் குமின்ஸ் பந்துவீச்சில் கவாஜாபிடம் கேட்ச் கொடுத்து இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளார்.

புஜாரா மற்றும் ரகானே தற்போது களத்தில் விளையாடி வருகின்றனர். 12 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்களை எடுத்துள்ளது.

புஜாரா மற்றும் ரகானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணி ஓரளவுக்கு ஸ்கோரை எட்ட முடியும்.

You'r reading அடிலெய்டு டெஸ்ட்: இந்தியா தடுமாற்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பத்தாவது குழந்தைக்கு தந்தையான எட்டி மர்பி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்