287 ரன்கள் இலக்கு! - வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 287 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 287 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக மார்க்ரம் 94 ரன்களும், ஹசிம் அம்லா 82 ரன்களும், கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி 63 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 10 ரன்களிலும், புஜாரா டக் அவுட் ஆகியும் வெளியேறினர். இதனால், இந்திய அணி 28 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

பிறகு முரளி விஜய் 46 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து, ரோஹித் சர்மா 10 ரன்னிலும் பார்த்திவ் படேல் 19 ரன்களிலும் வெளியேற 164 ரன்களுக்கு முக்கியமான 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால், மறுபுறம் கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று போராடினார். அற்புதமாக ஆடிய விராட் கோலி, 246 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது 21ஆவது டெஸ்ட் சதமாகும்.

மேலும், தென் ஆப்பிரிக்கா மைதானங்களில் இந்திய கேப்டனால் அடிக்கப்பட்ட இரண்டாவது சதமாகும். முன்னதாக, 1996-97ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் 169 ரன்கள் குவித்திருந்தார்.

150 ரன்களை கடந்த விராட் கோலி, இறுதியாக அணியின் எண்ணிக்கை 307ஆக இருந்தபோது 153 ரன்களில் வெளியேறினார். அத்துடன் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

பின்னர் 28 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், அந்த அணி 3 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. மார்க்ரம், ஹசிம் ஆம்லா இருவரும் தலா 1 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினர். இருவரும் பும்ரா பந்தில் எல்.பி.டபள்யூ அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

பின்னர் டீன் எல்கர், டி வில்லியர்ஸ் இணை பொறுப்புடன் ஆடியது. இதனால், மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்துள்ளது. அபாரமாக ஆடிய டி வில்லியர்ஸ் 78 பந்துகளில் [6 பவுண்டரிகள்] அரைச்சதத்துடனும், டீன் எல்கர் 36 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 4ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ் 80 ரன்களிலும், டீன் எல்கர் 61 ரன்களிலும், எடுத்து வெளியேறினர். பின்னர், குவிண்டன் டி காக் [12], பிலாந்தர் [26], மஹாராஜ் [6], ரபாடா [4] என அடுத்தடுத்து வெளியேறினர்.

ஒருபுறம் நிதானமாக விக்கெட்டை விழாமல் ஆடிய கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி 49 ரன்களில் 9ஆவது விக்கெட்டாக வெளியேறினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால், இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி தரப்பில் மொஹமது சமி 4 விக்கெட்டுகளையும், ஜாஸ்புரிட் பும்ரா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். தற்போது, இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

You'r reading 287 ரன்கள் இலக்கு! - வெற்றி பெறுமா இந்திய அணி? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கண்மூடித்தனமாக போலீஸ்காரர் சுட்டதில் 3 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்