காங். பொதுச் செயலாளர் பதவி - பிரியங்காவுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து!

MKStalin Kanimozhi wishes to Priyanka Gandhi

காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் பிரியங்கா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரியங்காவை உ.பி.யின் கிழக்குப் பிராந்திய பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமித்துள்ளார். அரசியலில் குதித்துள்ள பிரியங்காவுக்கு ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், தீவிர அரசியலில் கால் பதித்துள்ள பிரியங்கா காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

புதிய பொறுப்பில் மிகச் சிறந்து விளங்க வாழ்த் துகிறேன் என்று டிவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போன்று கனிமொழி எம்.பி.யும் பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

You'r reading காங். பொதுச் செயலாளர் பதவி - பிரியங்காவுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்