மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும் - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

Election Commission says Only electronic voting machine will be used

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்படும். மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் திட்டமில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தில்லுமுல்லு நடப்பதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கின்றன. சமீபத்தில் லண்டனில் செய்தியாளர்களிடம், சையத் என்ற மின்பொறியாளரும் மின்னணு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.

கடந்த 2014 தேர்தலில் மோடி பிரதமரானதும் மின்னணு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ததால்தான் என்றும் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இதனால் பழையபடி வாக்குச் சீட்டு முறைக்கே மாற வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதற்கு பதிலளித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்படாது என்றும் மின்னணு எந்திரங்களே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் மின்னணு எந்திரங்கள் குறித்த அச்சங்கள், புகார்களை வெளிப்படையாகத் தெரிவித்தான் விளக்கம் தரவும் நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளதாகவும் சுனில் அரோரா கூறியுள்ளார்.

You'r reading மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும் - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காங். பொதுச் செயலாளர் பதவி - பிரியங்காவுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்