இன்னமும் கேப்டனுக்கு குரல் ஒத்துழைக்கலையே.. அமெரிக்காவில் இருந்து குடியரசு தின வாழ்த்து வீடியோ ரிலீஸ்!nbsp

The voice still not cooperates with the captain..Republican Day Greeting Video from USA

அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தும் கேப்டனுக்கு குரல் ஒத்துழைக்கலையே என்ற ஏக்கம் அக்கட்சி தொண்டர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், குடியரசு தின வாழ்த்துச் செய்தி கூறி சில விநாடிகள் மட்டும் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் வணக்கம். இன்று இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்... லஞ்சமில்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி வேண்டும் ..

தேர்தலில் மக்களோடு நின்று நிலை நாட்டுவோம் என்று சிரமப்பட்டு விஜயகாந்த் உச்சரிக்கும் காட்சியைப் பார்த்து கேப்டனுக்கு இன்னமும் குரல் ஒத்துழைக்கலையே என்று வருத்தத்துடன் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர் அவரின் விசுவாசிகளும், தொண்டர்களும்.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தேர்தலுக்கு முன் வருவார். பழைய கம்பீரக் குரலைக் கேட்கலாம் என்று கேப்டனை ஆவலுடன் காத்திருந்த தொண்டர்களுக்கு வீடியோவில் கேப்டனின் சிரமமான குரலை கேட்டு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

You'r reading இன்னமும் கேப்டனுக்கு குரல் ஒத்துழைக்கலையே.. அமெரிக்காவில் இருந்து குடியரசு தின வாழ்த்து வீடியோ ரிலீஸ்!nbsp Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நியூசி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - 324 ரன்கள் குவித்து இந்தியா அபாரம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்