தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை... தேசிய கீதமும் இசைக்கப்படலையே ஏன்? - சர்ச்சையைக் கிளப்பும் மதுரை எய்ம்ஸ் விழா!

Controversy on Not played Tamil Thaai Vaazhthu on Modis today program

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை, தேசிய கீதமும் இசைக்கப்படாதது ஏன்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவை பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே மாற்றியது முதலே சர்ச்சை மேல் சர்ச்சைதான். இன்று நண்பகல் நடந்த அடிக்கல் நாட்டு விழா மேடைக்கு பிரதமர் மோடி வந்தவுடனே பூங்கொத்து வரவேற்பு, பொன்னாடை போர்த்துவது, வரவேற்புரை என விழா நிகழ்ச்சிகள் விறுவிறுவென நடந்தன. மோடியும் 10 நிமிடம் கூட பேசவில்லை அவருடைய ஆங்கிலப் பேச்சையும் யாரும் மொழிபெயர்க்க வில்லை.

உரையை நன்றி, வணக்கம் என்று முடித்த மோடி அப்படியே பாஜக மேடைப் பக்கம் சென்று விட்டார். அரசு நிகழ்ச்சிகளில் விழா ஆரம்பிக்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தான் மரபு.

அதெல்லாம் நடக்காதது ஏன்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மறந்து விட்டார்களா? அல்லது நேரத்தை மிச்சப்படுத்த மோடியே தவிர்த்துவிட்டாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி தாய் நாட்டை இப்படியா அவமானப்படுத்துவது, தேசப்பற்றாளர்களின் ரத்தம் கொதிக்கிறது என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்

You'r reading தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை... தேசிய கீதமும் இசைக்கப்படலையே ஏன்? - சர்ச்சையைக் கிளப்பும் மதுரை எய்ம்ஸ் விழா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிக்கிட்டான் காத்தாடி போல்.. தில்லுக்குதுட்டு2 படத்தின் 2வது சிங்கிள் ட்ராக் நாளை ரிலீஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்