95% பேர் பணிக்குத் திரும்பியதாக அரசு பொய் சொல்கிறது - ஜாக்டோ-ஜியோ குற்றச்சாட்டு!

Jacto Geo claimed Government lies that 95% of people returned to work

ஆசிரியர்களில் 95 சதவீதம் பேர் பணிக்குத் திரும்பிவிட்டதாக அரசு பொய்யான தகவலை கூறுகிறது என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

ஒரு சிலர் பணிக்குத் திரும்பியுள்ளனர் என்பது உண்மைதான்.95% என்பதெல்லாம் தவறான தகவல். போராடும் பெண் ஊழியர்களை போலீசார் மோசமாக நடத்துகின்றனர். கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்து உள்ளிரவு வரை உணவு, குடிநீர் இல்லாமல் சிரமப் படுத்துவதால் பெண் ஊழியர்கள் போராட்ட த்துக்குத்தான் வரவில்லையே தவிர பணிக்குச் செல்லவில்லை.

எந்த அரசிலும் எங்களை இவ்வாறு அடக்குமுறை செய்ததில்லை. ஜெயலலிதா கூட போராடிய எங்களை மரியாதையாகவே நடத்தினார். தற்காலிக ஊழியர்கள், ஆசிரியர்களை நியமிப்பது என்பது பிரச்னைக்கு தீர்வாகாது. தேர்தல் பணிகளை தற்காலிக ஊழியர்களைக் கொண்டு நடத்த தேர்தல் ஆணையமே சம்மதிக்கவில்லை.

எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

You'r reading 95% பேர் பணிக்குத் திரும்பியதாக அரசு பொய் சொல்கிறது - ஜாக்டோ-ஜியோ குற்றச்சாட்டு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி எடுக்க போகும் ஆயுதம் “திமுகவில் கோலோச்சும் அதிமுக மாஜிக்கள்”? வெடிக்க காத்திருக்கும் பூகம்பம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்